About SONGS IN MEERA 1945
ஸ்ரீமதி எம்/எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் 'மீரா ' திரைப்படம் 1945ம் ஆண்டில் வெளிவந்தது. அருமையான கர்நாடக சங்கீத பாடல்கள் நிறைந்த திரைப்படம் . இசை அமைத்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன். பாடல்கள் இயற்றியவர் கல்கி.! ஒன்றிரண்டு பாடல்கள் மட்டும் பாபநாசம் சிவன். பற்பல ஆண்டுகள் மீரா திரைப்படம் காண்பதே அரிதாக இருந்தது. நல்ல வேளையாக அண்மையில் யூ ட்யூப் 'ல் முழு திரைப்படம் காணக் கிடைக்கிறது! டவுன்லோட் செய்து மீண்டும் மீண்டும் பார்த்து , கேட்டு மெய்மறக்க வேண்டிய திரைப்படம்.! வரும் தலைமுறைகளுக்கு காப்பாற்றித் தரவேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. --------------------------------------------------------------- எம்.எஸ். அவர்கள் பாடிய பாடல்கள் வரிசையாக இங்கு தரப்பட்டுள்ளன. ----------------------- 1) முரளி மோஹனா...