Posts

About SONGS IN MEERA 1945

Image
ஸ்ரீமதி   எம்/எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின்  'மீரா ' திரைப்படம்  1945ம் ஆண்டில்  வெளிவந்தது. அருமையான  கர்நாடக சங்கீத பாடல்கள்  நிறைந்த  திரைப்படம் .    இசை  அமைத்தவர்  எஸ்.வி.வெங்கட்ராமன்.      பாடல்கள்  இயற்றியவர்    கல்கி.!     ஒன்றிரண்டு  பாடல்கள்  மட்டும்  பாபநாசம் சிவன்.   பற்பல ஆண்டுகள்  மீரா  திரைப்படம்   காண்பதே அரிதாக  இருந்தது. நல்ல  வேளையாக அண்மையில் யூ ட்யூப்  'ல் முழு  திரைப்படம் காணக்  கிடைக்கிறது! டவுன்லோட் செய்து  மீண்டும் மீண்டும்  பார்த்து , கேட்டு  மெய்மறக்க வேண்டிய திரைப்படம்.!  வரும் தலைமுறைகளுக்கு  காப்பாற்றித் தரவேண்டிய  கடமை  அனைவருக்கும்  உண்டு. --------------------------------------------------------------- எம்.எஸ். அவர்கள்  பாடிய  பாடல்கள்  வரிசையாக இங்கு  தரப்பட்டுள்ளன. ----------------------- 1)  முரளி மோஹனா   ...... .(காபி  ராகம்) 2)  காற்றினிலே வரும் கீதம் - (  மிஸ்ர ஜோன்புரி ) 3)  எனது உள்ளமே  -   (செஞ்சுருட்டி) 4)   கிரிதர் கோபாலா - (மோஹனம்)  5)  யது நந்தனா  - (திலங்) 6)  லீலைகள்  செய்வானே 7) வேய்ங்குழலின் நாதம் - (பத

Smt.MS. 1968- MUSIC ACADEMY- -presidential address and thanks-giving speech

Image
தலைமை உரை ================ https://issuu.com/themusicacademy/docs/1969/16 மேன்மை தங்கிய மஹாராணி அவர்களே, வித்வத் சபைத் தலைவர் அவர்களே, சங்கீத் மஹநீயர்களே ,தாய்மார்களே, பெரியோர்களே, ரஸிகப்பெருமக்களே ! --  ஸங்கீத வித்யார்த்திகளின் பிரதிநிதியாக என்னைக் கருதி ,இந்த மகத்தான தலைமைப் பொறுப்பை ,சங்கீத வித்வத்  சபையினர் எனக்கு   அளித்திருப்பதாகவே கொள்கிறேன். சங்கீத வித்யாப்யாஸத்தைத் தொடர்ந்து நான்  மேற்கொள்ளுவதற்கு  ஊக்கமளிக்கவே ,  இந்த பெரும்  கௌரவத்தை எனக்கு  வழங்கியிருப்பதாகக் கருதுகிறேன்.  மேலும் பெண் குலத்தை பெருமைப் படுத்துவதற்காக  என்னை அதன் பிரதிநிதியாகக் கருதி  இந்த  மாநாட்டுக்கு தலைமை வகிக்கும் பாக்கியத்தை எனக்குத் தந்திருப்பதாகவும்  எண்ணுகிறேன்.எனது சக வித்யார்த்திகளின்   சார்பிலும் ,பெண் குலத்தின் சார்பிலும் ,எனது  இதய  பூர்வமான நன்றியை வித்வத்  சபையினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.     சங்கீத  சாகரத்தில் மூழ்கித்  திளைத்த வித்துவான்கள்  பலர் இருக்க அந்த ஸாகரத்தின் கரையோரமாக சிறிதே  நனைந்து நிற்கும் நான், ஆண்டவன் சித்தம்  இது எனக் கருதி , அவனது அருளையும் பெரியோர்களின

VINTAGE MS 78 RPM RECORDS

Image
All  the  songs  covered  here  and more  are  given  individual  page, with  lyrics  and  info at     https://sites.google.com/site/homage2mssubbulakshmi     எம். எஸ். சுப்புலக்ஷ்மி  அவர்களின்  இசைத்தட்டு  பாடல்கள்  , இப்போதெல்லாம்  எங்கும் எளிதாக்க கிடைப்பதில்லை.  சேவாசதனம், (1938), சாவித்ரி, சகுந்தலை (1940), மீரா (தமிழ் -1946), மீரா (ஹிந்தி-1947)  ஆகிய  திரைப்படங்களில்  அருமையான  பாடல்கள்  அளித்துள்ளார். சேவாசதனம்  படப்பாடல்கள் சில  கிடைக்கின்றன.  சகுந்தலை  பாடல்கள்  , சாவித்ரி  , மீரா  ஆகிய  படங்களின்  பாடல்களும்  கிடைக்கின்றன.  ஆனால்  எளிதல்ல.         1940  தொடங்கி  ( 24 வயது) 1960  வரை  , அவரது  குரல்  அற்புதமாக  இருந்தது. அந்த  20 ஆண்டுகளில்  அவர்  தனிப்பாடல்களாக   நிறைய இசைத்தட்டுகள்  தந்தார்.        பின்வரும் பாடல்கள்  எல்லாமே  78  ஆர்.பி, எம்.  ரெகார்டாக தரப்பட்டவை      சரியாக  3  நிமிடங்கள்  ஒரு பக்கம்.  அதேபோல  மறுபக்கமும்  3    நிமிடங்கள். ( இரண்டு ஆண்டுகளுக்கு  முன்பே  , சரிகம கம்பெனி , கல்கி  இயற்றிய 12  பாடல்கள்  அடங்கிய  தொகுப்பை  பொதுவெளியில்  இலவ

'மீரா யாத்திரை '- அமரர் கல்கி மீரா படப்பிடிப்பு பற்றி 1944ல் எழுதிய கட்டுரை

Image
'மீரா யாத்திரை '-  அமரர் கல்கி  மீரா படப்பிடிப்பு பற்றி  1944ல்  எழுதிய  கட்டுரை  http://s-pasupathy.blogspot.in/2016/09/12.html இ ராஜகுமாரி மீரா தன் குழந்தை உள்ளத்தைக் கொள்ளைகொண்ட மாயக் கண்ணனை மணக்க விரும்பினாள். அவளுடைய விருப்பத்துக்கு மாறாகச் சித்தூர் ராணாவுக்கு அவள் மாலையிட நேர்ந்தது. ஸ்ரீ மதி எம்.எஸ்.சுப்புல க்ஷ் மிக்கு அத்தகைய நிர்ப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை. இரண்டு மூன்று கதைகளை அவருக்குச் சொல்லி , எந்தக் கதையில் நடிக்க இஷ்டம் என்று கேட்டபோது , மீராவாகத்தான் நடிப்பேன் என்று அவர்தம் விருப்பத்தைத் தெரிவித்தார். அதன் பயனாக மீரா அநுபவித்த கஷ்டங்களையெல்லாம் ஸ்ரீ மதி எம்.எஸ். ஸு ம் ஏறக்குறைய அநுபவிக்க வேண்டி நேர்ந்த போதிலும் , அவற்றுக்கெல்லாம் அவருடைய சொந்த விருப்பமும் பிடிவாதமுமே காரணங்கள் ஆயின. மீராவாக நடிப்பதென்றால் , அது எளிதான காரியமா ? மூர்மார்க்கெட்டைப் பிருந்தாவனமாகவும் கூவம் நதியை யமுனையாகவும் நினைத்துக் கொண்டு பக்திப் பரவசத்துடன் நடித்துவிட முடியுமா ? மாயக் கண்ணனைத் தேடி மீரா அலைந்த இடங் களுக்கெல்லாம் நானும் போவேன் ; மீரா தரிசித்த திருக் கோயில்களையெல்லா

SEVAA SADHANAM - MSS FIIRST FILM 1938- SYNOPSIS IN THAMIZH

  ஈஸ்வர சர்மா ஒரு அடகுக்கடை யில் குமாஸ்தாவாக வேலை பார்ப்பவர். அவரது மனைவி சுமதி. சர்மாவின் விதவை சகோதரி குண்டம்மாவும் அவர்களுடன் வசித்து வந்தார். எப்போது பார்த்தாலும் சுமதியை திட்டுவது , குண்டம்மாவுக்கு வழக்கம். மேடைப்பாடகி கமலேஷ் குமாரி யும்,அவரது புதல்வி சுகுணாவும் அவர்களது அடுத்த வீட்டில் வசித்து வந்தனர். சுகுணா அடிக்கடி சுமதியின் வீட்டுக்கு வருவாள். சுமதியும் சுகுணாவும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். குண்டம்மாவின் வசவு ,எல்லை தாண்டிபோனது. இதனால் மனம் நொந்து போன சுமதி ஒரு தோட்டத்தில் போய் தஞ்சம் அடைகிறாள். தோட்டக்காரன் சுமதியை தோட்டத்தை விட்டு வெளியேறச் சொல்லி ,கடுமையாகப் பேசுகிறான். அப்போது வக்கீல் பத்மநாப அய்யரும் அவரது மனைவி சுபத்திராவும் அதைக்கண்டு வருத்தமடைந்து, தோட்டக்காரனை கண்டித்து ,சுமதியை தங்களது வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். சுமதியைத் தேற்றி , சுமதியை அவளது வீட்டுக்கு கொண்டுசென்று பத்திரமாக விடுகின்றனர். ஈஸ்வர சர்மா மேலும் கோபம் கொண்டு, அயலாருடன் சென்றதற்காக சுமதியை அடித்து துன்புறுத்துகிறார், ஒரு ,நாள் , சுபத்திரா சுமதியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று ,புதிய ஆடை